×

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வென்றால் இந்தியா 15 ஆண்டு பின்னோக்கி செல்லும்: முன்னாள் முதல்வர் அகிலேஷ் மனைவி டிம்பிள் யாதவ் கருத்து

லக்னோ: நாடாளுமன்றத் தேர்தலில் வென்று பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா 15 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிடும் என டிம்பிள் யாதவ் தெரிவித்துள்ளார். உ.பி.யின் மெயின்புரி மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதல்வர் அகிலேஷ் மனைவி டிம்பிள் யாதவ் போட்டியிடுகிறார். இந்நிலையில், சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் டிம்பிள் யாதவ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மக்களை பாதிக்கும் உண்மையான பிரச்சனைகளில் இருந்து திசைதிருப்ப பிரிவினை அரசியலை பாஜக கடைப்பிடிப்பதாக குற்றம்சாட்டினார். இம்முறை மக்கள் மாற்றத்துக்காக வாக்களிக்கப் போகிறார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

பிரிவினைவாத அரசியலை மக்கள் புரிந்து கொண்டு விட்டனர். பாஜக ஆட்சியில் விலைவாசி உயர்ந்துவிட்டது; அரசு திட்டங்கள் மக்களை சென்றடையவில்லை. பாஜக வென்றால் இந்தியா 15 ஆண்டு பின்னோக்கி செல்லும் என டிம்பிள் கூறினார். தொடர்ந்து பேசிய டிம்பிள் யாதவ், நாட்டின் அரசியல் சட்டத்துக்கு பாஜக ஆட்சியில் அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டினார். தற்போது நடைபெறும் தேர்தல் இந்தியாவின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கான தேர்தலாகும். பொய் பேசுவதில் பாஜகவினர் திறமையானவர்கள் என்பதை புரிந்த மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என கடுமையாக விமர்சனம் செய்தார்.

The post நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வென்றால் இந்தியா 15 ஆண்டு பின்னோக்கி செல்லும்: முன்னாள் முதல்வர் அகிலேஷ் மனைவி டிம்பிள் யாதவ் கருத்து appeared first on Dinakaran.

Tags : India ,BJP ,Former Chief Minister ,Akilesh ,Dimple Yadav ,Lucknow ,U. ,Mainpuri Lok Sabha ,Samajwadi ,Dinakaran ,
× RELATED தேர்தல் ஆணையரை சந்திக்கும் I.N.D.I.A. கூட்டணி தலைவர்கள்